அவனிதனிலே பிறந்து
[01:07.06] அவனிதனிலே பிறந்து
[00:00.00] மதலை எனவே தவழ்ந்து
[00:00.00] அழகு பெறவே நடந்து
[00:00.00] இளைஞோனாய்
[00:00.00] அருமழலையே மிகுந்து
[00:00.00] குதலை மொழியே புகன்று
[00:00.00] அதிவிதம் அதாய் வளர்ந்து
[00:00.00] பதினாறாய்
[00:00.00] சிவகலைகள் ஆகமங்கள்
[00:00.00] மிகவுமறை ஓதும் அன்பர்
[00:00.00] திருவடிகளே நினைந்து துதியாமல்
[00:00.00] தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
[00:00.00] வெகுகவலை யாய்உழன்று
[00:00.00] திரியும் அடியேனை
[00:00.00] உன்றன் அடிசேராய்
[00:00.00] மவுன உபதேச சம்பு
[00:00.00] மதியறுகு வேணி தும்பை
[00:00.00] மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
[00:00.00] மனமகிழவே அணைந்து
[00:00.00] ஒருபுறமதாகவந்த
[00:00.00] மலைமகள் குமார
[00:00.00] துங்க வடிவேலா
[00:00.00] பவனி வரவே உகந்து
[00:00.00] மயிலின் மிசையே திகழ்ந்து
[00:00.00] படி அதிரவே நடந்த
[00:00.00] கழல்வீரா
[00:00.00] பரம பதமே செறிந்த
[00:00.00] முருகன் எனவே உகந்து
[00:00.00] பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.
