Lrc Player

04_POOKKALAE_SATTRU_OYIVEDU

Unknown artist
[05:08.33]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.31] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[00:33.06] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[00:44.06] ♪

[00:44.81] ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

[00:49.81] ♪

[00:50.06] ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா

[00:55.31] ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

[00:58.55] ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[01:07.56] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[01:18.31] தின தக்கிடுதானே நா ….

[01:49.05] இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ

[01:55.06] விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலன் உணர்ந்திடும் ஐ

[02:00.56] இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ

[02:06.31] அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நொய்யளவு

[02:10.80] ஐயமில்லை

[02:12.31] என் கைகளை கோர்த்திடு ஐவிரலை

[02:14.80] இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை

[02:17.56] அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்

[02:23.55] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[02:34.31] ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

[02:40.06] ♪

[02:40.57] ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா

[02:45.31] ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

[02:48.81] ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[03:28.06] நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனான்

[03:35.80] வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனான்

[03:42.06] என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்

[03:47.31] கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்

[03:52.80] யுகம் யுகம் காண முகம் இது போதும்

[03:58.55] புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்

[04:03.81] மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்

[04:09.80] நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே

[04:15.30] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[04:25.80] ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

[04:31.55] ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளின் ஐ அவன் நீயா

[04:37.05] ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

[04:40.56] ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[04:48.81] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்