Lrc Player

கண்ணே கண்மணியே

வள்ளலார்
[06:31.24]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.32] 055. உபதேச உண்மை

[00:00.00] upatēsa uṇmai

[00:00.00] கலிவிருத்தம்

[00:00.00] பண்: நட்டராகம்

[00:00.00] திருச்சிற்றம்பலம்

[00:00.00] 1. கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே

[00:00.00] விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே

[00:00.00] தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே

[00:00.00] உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 2. வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே

[00:00.00] வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே

[00:00.00] அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே

[00:00.00] ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 3. அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே

[00:00.00] என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே

[00:00.00] இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே

[00:00.00] உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 4. தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே

[00:00.00] அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே

[00:00.00] இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே

[00:00.00] உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 5. துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே

[00:00.00] அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே

[00:00.00] இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே

[00:00.00] ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 6. என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே

[00:00.00] நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே

[00:00.00] மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே

[00:00.00] ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 7. திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே

[00:00.00] கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே

[00:00.00] மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்

[00:00.00] உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 8. தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே

[00:00.00] அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்

[00:00.00] கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே

[00:00.00] உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 9. பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே

[00:00.00] அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்

[00:00.00] எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்

[00:00.00] உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

[00:00.00] 10. நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே

[00:00.00] பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே

[00:00.00] என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்

[00:00.00] உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.