Lrc Player

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை

Unknown artist
[14:22.25]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.21] ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை

[00:27.45] நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

[00:31.97] வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்

[00:36.22] கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

[00:41.54] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[00:46.05] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[00:59.86] என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே

[01:04.64] என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்

[01:08.89] என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ

[01:14.20] என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே

[01:18.72] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[01:23.23] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[01:37.31] நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா

[01:41.56] கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே

[01:46.09] ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்

[01:50.33] ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே

[01:55.66] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[02:00.44] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[02:13.72] அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து

[02:18.59] அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்

[02:22.58] அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற  வல்லிரேல்

[02:27.67] அஞ்சல் அஞ்சல் என்று நாதன்  அம்பலத்தில் ஆடுமே

[02:32.99] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[02:36.97] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[02:50.52] இடது கண்கள் சந்திரன்  வலது கண்கள் சூரியன்

[02:55.86] இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு

[02:59.58] எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்

[03:04.36] உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ

[03:09.41] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[03:13.67] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[03:42.46] உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல

[03:46.44] மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல

[03:50.96] பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல

[03:55.51] அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ

[04:00.31] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[04:04.88] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[04:18.95] மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்

[04:23.47] வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்

[04:27.45] நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்

[04:32.24] என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே

[04:37.02] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[04:41.60] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[04:55.70] ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

[04:59.97] ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

[05:04.75] ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

[05:09.30] ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே

[05:14.08] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[05:18.86] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[05:32.67] நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை

[05:37.06] நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை

[05:41.59] அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்

[05:46.12] எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே

[05:51.17] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[05:55.43] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[06:09.78] பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை

[06:14.30] பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை

[06:18.55] மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை

[06:23.06] மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

[06:28.91] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[06:33.95] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[07:11.94] அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ

[07:16.19] கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ

[07:20.70] இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ

[07:25.22] செமபொன்  அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

[07:30.31] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[07:34.81] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[08:25.45] மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்

[08:29.96] நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்

[08:34.48] ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்

[08:39.52] தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே

[08:44.05] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[08:48.58] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[09:02.92] நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே

[09:07.17] நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை

[09:11.95] நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே

[09:16.21] நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே

[09:20.99] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[09:25.79] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[09:39.62] இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்

[09:44.15] இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ

[09:48.94] இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை

[09:53.45] எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே

[09:58.50] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[10:02.80] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[10:30.45] காரகார காரகார காவல் ஊழி காவலன்

[10:34.71] போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்

[10:39.49] மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ

[10:43.81] ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே

[10:48.87] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[10:54.00] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[11:07.28] விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்

[11:11.53] கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்

[11:16.32] மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்

[11:20.61] அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே

[11:25.93] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[11:30.44] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[11:44.28] அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்

[11:48.26] உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்

[11:53.03] மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்

[11:57.82] சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே

[12:02.62] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[12:07.39] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[12:20.94] உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்

[12:25.72] தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய

[12:30.23] வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே

[12:34.76] உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே

[12:39.27] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[12:44.36] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[12:57.91] ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

[13:02.24] ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்

[13:07.04] ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

[13:11.81] ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே

[13:16.60] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[13:21.13] ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

[00:00.00] திருச்சிற்றம்பலம்

[00:00.00] - சித்தர் சிவவாக்கியார்