Jenmam Nirainthathu
[00:07.25] ஜென்மம் நிறைந்தது
[00:09.91] சென்றவர் வாழ்க
[00:13.35] சிந்தை கலங்கிட
[00:15.74] வந்தவர் வாழ்க
[00:19.98] நீரில் மிதந்திடும்
[00:22.64] கண்களும் காய்க
[00:26.10] நிம்மதி நிம்மதி
[00:29.30] இவ்விடம் சூழ்க!
[00:36.20] ஜனனமும் பூமியில்
[00:38.86] புதியது இல்லை
[00:42.84] மரணத்தைப் போல் ஒரு
[00:44.96] பழையதும் இல்லை
[00:48.42] இரண்டுமில்லாவிடில்
[00:51.32] இயற்கையும் இல்லை
[00:53.98] இயற்கையின் ஆணைதான்
[00:57.98] ஞானத்தின் எல்லை
[01:04.35] பாசம் உலாவிய
[01:06.47] கண்களும் எங்கே?
[01:09.40] பாய்ந்து துழாவிய
[01:12.59] கைகளும் எங்கே?
[01:16.03] தேசம் அளாவிய
[01:22.42] கால்களும் எங்கே?
[01:23.20] தீ உண்டதென்றது
[01:25.06] சாம்பலும் இங்கே
[01:30.64] கண்ணில் தெரிந்தது
[01:33.84] காற்றுடன் போக
[01:36.76] மண்ணில் பிறந்தது
[01:40.20] மண்ணுடல் சேர்க
[01:44.20] எலும்பு சதை கொண்ட
[01:46.84] உருவங்கள் போக
[01:50.03] எச்ச்ங்களால் அந்த
[01:51.89] இன்னுயிர் வாழ்க
[01:58.01] பிறப்பு இல்லாமலே
[02:01.72] நாளொன்று இல்லை
[02:04.91] இறப்பு இல்லாமலும்
[02:07.84] நாளொன்று இல்லை
[02:11.54] நேசத்தினால் வரும்
[02:15.27] நினைவுகள் தொல்லை
[02:18.18] மறதியைப் போல்
[02:20.84] ஒரு மாமருந்தில்லை
[02:24.84] கடல் தொடு ஆறுகள்
[02:29.88] கலங்குவதில்லை
[02:33.32] தரை தொடும் தாரைகள்
[02:36.25] அழுவதும் இல்லை
[02:39.96] நதி மழை போன்றதே
[02:43.69] விதியென்று கண்டும்
[02:46.35] மதி கொண்ட மானுடர்
[02:49.27] மயங்குவதேன்ன !
[02:56.18] மரணத்தினால் சில
[02:59.62] கோபங்கள் தீரும்
[03:02.28] மரணத்தினால் சில
[03:08.13] சாபங்கள் தீரும்
[03:09.45] வேதம் சொல்லாததை
[03:12.37] மரணங்கள் கூறும்
[03:16.62] விதை ஒன்று வீழ்ந்திட
[03:21.93] செடிவந்து சேரும்
[03:25.91] பூமிக்கு நாம் ஒரு
[03:29.11] யாத்திரை வந்தோம்
[03:33.10] யாத்திரை தீரும் முன்
[03:34.42] நித்திரை கொண்டோம்
[03:38.40] நித்திரை போவது
[03:40.79] நியதி என்றாலும்
[03:43.98] யாத்திரை என்பது
[03:46.91] தொடர்கதையாகும்
[03:58.59] தென்றலின் பூங்கரம்
[04:03.11] தீண்டிடும் போதும்
[04:04.96] சூரியக் கீற்றொளி
[04:07.62] தோன்றிடும் போதும்
[04:12.13] மழலையின் தேன்மொழி
[04:14.01] செவியுறும் போதும்
[04:17.98] மாண்டவர் எம்முடன்
[04:20.64] வாழ்ந்திட கூடும்
[04:24.89] மாண்டவர் சுவாசங்கள்
[04:31.25] காற்றுடன் சேர்க !
[04:35.25] தூயவர் கண்ணொளி
[04:37.91] சூரியன் சேர்க !
[04:41.62] பூதங்கள் ஐந்திலும்
[04:46.68] பொன்னுடல் சேர்க!
[04:51.19] போனவர் புண்ணியம்
[04:52.78] எம்முடன் சேர்க !
