Lrc Player

03-KAMASHI VIRUTHAM

Unknown artist
[14:21.42]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.22] காப்பு

[00:19.97] மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்

[00:24.48] துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்

[00:25.22] புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்

[00:26.97] கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

[00:35.96] நூல்

[00:36.71] சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

[00:49.21] சோதியா நின்ற வுமையே.

[00:53.22] சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

[00:58.47] துன்பத்தை நீக்கி விடுவாய்.

[01:00.96] சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்

[01:05.22] துயரத்தை மாற்றி விடுவாய்

[01:09.21] ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ

[01:12.72] சிறியனால் முடிந்திராது

[01:16.71] சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்

[01:20.97] சிறிய கடனுன்னதம்மா.

[01:25.72] சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி

[01:27.96] சிரோன்மணி மனோன்மணியு நீ.

[01:33.46] அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

[01:36.72] யனாத ரட்சகியும் நீயே,

[01:41.47] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[01:45.22] அன்னை காமாட்சி உமையே.

[00:00.00] பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

[00:00.00] பாடகந் தண்டை கொலுசும்,

[00:00.00] பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட

[00:00.00] - பாதச் சிலம்பி னொலியும்,

[00:00.00] முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

[00:00.00] மோகன மாலை யழகும் ;

[00:00.00] முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்

[00:00.00] முடிந்திட்ட தாலி யழகும் ,

[00:00.00] சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

[00:00.00] செங்கையில் பொன்கங்கணம்,

[00:00.00] ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

[00:00.00] சிறுகாது கொப்பி னழகும்,

[00:00.00] அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை

[00:00.00] அடியனாற் சொல்லத் திறமோ,

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்

[00:00.00] குறைகளைச் சொல்லி நின்றும்,

[00:00.00] கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ

[00:00.00] குழப்பமா யிருப்ப தேனோ

[00:00.00] விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்

[00:00.00] சதமாக நம்பி னேனே

[00:00.00] சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க

[00:00.00] சாதக முனக் கிலையோ

[00:00.00] மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய

[00:00.00] மதகஜனை யீன்ற தாயே.

[00:00.00] மாயனிட தங்கையே பரமனது மங்கையே

[00:00.00] மயானத்தில் நின்ற வுமையே

[00:00.00] அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்

[00:00.00] அன்பு வைத்தென்னை யாள்வாய்,

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்

[00:00.00] பேரான ஸ்தலமு மறியேன்

[00:00.00] பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்

[00:00.00] போற்றிக் கொண்டாடி யறியேன்,

[00:00.00] வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,

[00:00.00] வாயினாற் பாடியறியேன்,

[00:00.00] மாதா பிதாவினது பாதத்தை நானுமே

[00:00.00] வணங்கியொரு நாளுமறியேன்,

[00:00.00] சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்

[00:00.00] சரணங்கள் செய்து மறியேன்,

[00:00.00] சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,

[00:00.00] சாஷ்டாங்க தெண்ட னறியேன்,

[00:00.00] ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்

[00:00.00] ஆச்சி நீ கண்ட துண்டோ,

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்

[00:00.00] பிரியமாயிருந்த னம்மா,

[00:00.00] மெத்தனம் உடையை என்றறியாது நானுன்

[00:00.00] புருஷனை மறந்தனம்மா,

[00:00.00] பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்

[00:00.00] பராமுகம் பார்த்திருந்தால்,

[00:00.00] பாலன் யானெப்படி விசனமில்லாமலே

[00:00.00] பாங்குட னிருப்பதம்மா,

[00:00.00] இத்தனை மோசங்களாகாது ஆகாது

[00:00.00] இது தர்மமல்ல வம்மா

[00:00.00] எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ

[00:00.00] யிதுநீதி யல்லவம்மா,

[00:00.00] அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ

[00:00.00] அதை யெனக்கருள் புரிகுவாய்

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ

[00:00.00] மணி மந்தர காரிநீயே

[00:00.00] மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ

[00:00.00] மலையரையன் மகளானநீ,

[00:00.00] தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,

[00:00.00] தயாநிதி விசாலாட்சி நீ

[00:00.00] தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ

[00:00.00] சரவணனை யீன்ற வளும் நீ,

[00:00.00] பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்

[00:00.00] பேர்பெற வளர்த்தவளும் நீ,

[00:00.00] பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ

[00:00.00] பிரிய வுண்ணாமுலையு நீ

[00:00.00] ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ

[00:00.00] அகிலாண்டவல்லி நீயே

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்

[00:00.00] புத்திகளைச் சொல்லவில்லையோ,

[00:00.00] பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை

[00:00.00] பிரியமாய் வளர்க்க வில்லையோ,

[00:00.00] கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்

[00:00.00] கதறி நானழுத குரலில்,

[00:00.00] கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்

[00:00.00] காதினுள் நுழைந்த தில்லையோ

[00:00.00] இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா

[00:00.00] இனி விடுவதில்லை சும்மா,

[00:00.00] இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்

[00:00.00] இதுதரும மல்ல வம்மா,

[00:00.00] எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்

[00:00.00] ஏதும் நீதியல்ல வம்மா,

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்

[00:00.00] மூடனான் செய்த னம்மா

[00:00.00] மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு

[00:00.00] மோசங்கள் பண்ணி னேனோ

[00:00.00] என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே

[00:00.00] இக்கட்டு வந்த தம்மா

[00:00.00] ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து

[00:00.00] என்கவலை தீரு மம்மா

[00:00.00] சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே

[00:00.00] சிறுநாணமாகு தம்மா,

[00:00.00] சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்

[00:00.00] சிவசக்தி காமாட்சி நீ

[00:00.00] அன்னவாகனமேறி யானந்தமாக உன்

[00:00.00] அடியன் முன் வந்து நிற்பாய்

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க

[00:00.00] ளின்பமாய் வாழ்ந் திருக்க,

[00:00.00] யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்

[00:00.00] உன்னடியேன் தவிப்பதம்மா,

[00:00.00] உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்

[00:00.00] உன் பாதஞ் சாட்சியாக

[00:00.00] உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்

[00:00.00] உலகந்தனி லெந்தனுக்கு

[00:00.00] பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை

[00:00.00] போக்கடித் தென்னை ரட்சி

[00:00.00] பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்

[00:00.00] பிரியமாய்க் காத்திடம்மா

[00:00.00] அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க

[00:00.00] அட்டி செய்யா தேயம்மா,

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்

[00:00.00] பாங்குடனி ரட்சிக்கவும்,

[00:00.00] பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த

[00:00.00] பாலருக் கருள் புரியவும்

[00:00.00] சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்

[00:00.00] செங்கலிய ளணு காமலும்,

[00:00.00] சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

[00:00.00] ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

[00:00.00] பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்

[00:00.00] பிரியமாய்ச் காத்திடம்மா.

[00:00.00] பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி

[00:00.00] பிழைகளைப் பொறுத்து ரட்சி.

[00:00.00] ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

[00:00.00] னம்மை யேகாம்பரி நீயே

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.

[00:00.00] எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது

[00:00.00] இப்பூமி தன்னி லம்மா,

[00:00.00] இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்

[00:00.00] இனிஜெனன மெடுத்திடாமல்,

[00:00.00] முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்

[00:00.00] முக்காலும் நம்பினேனே,

[00:00.00] முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ

[00:00.00] முழித்திருக்காதே யம்மா,

[00:00.00] வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன

[00:00.00] விருத்தங்கள் பதினொன்றையும்

[00:00.00] விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை

[00:00.00] விமலனாரேசப் போறார்,

[00:00.00] அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்

[00:00.00] அருங்குறை யைத் தீருமம்மா,

[00:00.00] அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

[00:00.00] அம்மை காமாட்சி உமையே.