Oru naalil
[00:19.51] ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
[00:24.61] மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
[00:30.41] எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
[00:36.23] அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
[00:45.09] கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
[00:51.13] ஒரு வாசல் தேடியே விளையாட்டு
[00:56.92] கண் திறந்து பார்த்தால் பல கூத்து
[01:03.22] கண்மூடி கொண்டால் ...
[02:18.87] போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
[02:24.43] காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
[02:30.22] இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
[02:36.29] நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
[02:43.11] தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
[02:54.72] கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
[03:00.52] எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
[03:08.87] அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
[03:14.90] இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
[03:21.20] மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
[03:26.99] அந்த கடவுளை கண்டால்...
[04:26.26] அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
[04:30.53] அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
[04:36.33] உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
[04:42.11] நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
[04:48.91] பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
[05:00.79] உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
[05:06.59] நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
[05:15.42] பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
[05:20.96] பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
[05:27.29] கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
[05:33.32] மறு பிறவி வேண்டுமா...
