Lrc Player

Thamirabarani

Unknown artist
[04:55.81]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.24] தாமிரபரணியில் நீந்தி வந்த...

[00:24.49] என் ஆவாம் பூவிலையே...

[00:33.49] ஆயிரம் கனவ நீ வெதச்சுப் புட்டு

[00:37.74] கை வீசி போறவளே

[00:42.49] கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல

[00:46.99] மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச

[00:51.24] எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச

[00:55.49] கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே

[01:01.24] பெரும் காமுடியே

[01:07.49] அடியே உருவாஞ்சுருக்கே

[01:25.25] பத்துப் பனிரெண்டு மணி வர நானும்

[01:36.49] கண்ட படி திரிஞ்சேன்

[01:40.50] பொட்டப் புள்ள இவ பாத்துட்டு போனா

[01:45.24] பொட்டிக்குள்ள அடஞ்சேன்

[01:53.24] ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி

[01:57.99] இஷ்டத்துக்கு கெடந்தேன்

[02:01.99] பொட்டுக் கன்னி இவ சிரிச்சிட்டு போனா

[02:06.49] எட்டு மொற குளிச்சேன்

[02:09.75] மருதானி எல போல என் மனச நசுக்குறே

[02:18.00] அருக்கானி அழகா தான் என் உசுர குடிக்குறே

[02:26.99] ராட்டின தூரிய போல என்ன

[02:31.24] அடி ஏண்டி உருள விட்ட

[02:35.49] பொள்ளாச்சி சூட்டு தச்சி

[02:38.74] கண்காச்சி பாக்கையில

[02:40.49] அன்னாசி பழம் போல

[02:42.49] என்ன வெட்டி தின்ன அடி...

[02:45.75] அடியே கொடுவா நுனியே...

[02:54.50] அடியே கருவா ஒளியே...

[03:09.49] சல்லிப் பய இவன் மனசுல நீ தான்

[03:21.49] மல்லிச் செடிய வச்சே

[03:25.49] ஓட்டக் காசு என்ன உருப்படியாக்கி

[03:29.99] நெஞ்சுக் குழியில் வச்சே

[03:34.74] அடிப் போடி ஒன்ன பாத்தா

[03:37.49] ஒரு கிறுக்கு புடிக்குதே

[03:41.49] தல மேல ஒரு மேகம்

[03:45.99] அட தமுக்கு அடிக்குதே

[03:50.49] கோழிய போல என் உறக்கத்த நீ

[03:54.50] அட வெரச முழுங்குறியே

[03:59.49] வித்தாரக் கள்ளி ஒன்ன

[04:01.74] கொத்தாக அள்ளி வந்து

[04:03.74] பொத்தான போட்டுச் சின்ன

[04:05.99] நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா

[04:09.74] தனியே தனியே

[04:15.74] அருவா மினுங்கும் விழியே