Para-Para-New
[00:21.92] பற பற பற பறவை ஒன்று
[00:23.69] கர கர கர கரையில் நின்று
[00:25.17] கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
[00:28.68] கட கட கட கடலுக்குள்ளே
[00:30.67] பட பட பட இதயம் தேடி
[00:32.67] கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
[00:35.69] என் தேவன் போன திசையிலே
[00:39.41] ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
[00:43.20] என் ஜீவன் வந்து சேருமா
[00:46.17] தேகம் மீண்டும் வாழுமா
[00:49.93] இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
[00:55.20] அலை மறுபடி உன்னிடம் வருமா
[01:03.94] பற பற பற பறவை ....
[01:46.65] தண்ணீரில் வலையும் நிற்கும்
[01:48.18] தண்ணீரா வலையில் நிற்கும்
[01:49.91] எந்தேவன் எப்போதும் திரிகிறான்
[01:53.18] காற்றுக்கு தமிழும் தெரியும்
[01:54.67] கண்ணாளன் திசையும் தெரியும்
[01:56.68] கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
[02:00.42] உனது வேர்வை என் மார்புக்குள்
[02:03.92] பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
[02:07.18] ஈர வேர்வைகள் தீரவும்
[02:10.69] எனது உயிர்பசி காய்வதா
[02:13.92] வானும் மண்ணும் கூடும் போது
[02:17.93] நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை
[02:28.18] பற பற பற பறவை ....
[03:24.67] ஊரெங்கும் மழையும் இல்லை
[03:25.92] வேரெங்கும் புயலும் இல்லை
[03:27.67] என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
[03:31.17] கண்ணாளன் நிலைமை என்ன
[03:32.68] கடலோடு பார்த்து சொல்ல
[03:34.66] கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
[03:38.18] நீரின் மகன் எந்தன் காதலன்
[03:41.91] நீரின் கருணையில் வாழுவான்
[03:45.16] இன்று நாளைக்குள் மீளுவான்
[03:48.67] எனது பெண்மையை ஆளுவான்
[03:52.45] என்னை மீண்டும் தீண்டும் போது
[03:55.95] காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்
[04:05.92] பற பற பற பறவை ....
