Lrc Player

Journey

Pradeep kumar
[06:06.58]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:54.16] நான் என்பது யாரோ

[00:55.48] பெருந்திரளினிலே.. ஏடே

[00:58.68] நான் என்பதை வீசி

[01:01.07] எழுந்தேனே.. மனமே..

[01:04.26] தான் என்பது போகும்

[01:06.12] பெருங்கணத்தினிலே.. கூவி

[01:09.31] வாவென்றொரு வாழ்க்கை

[01:11.43] சிறுகுரலாய் அருளாய்ப் பேச

[01:14.65] போகாதொரு ஆழம்தேடி

[01:17.05] நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்

[01:19.70] வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

[01:22.37] தெளி தெளி தெளி தெளி

[01:24.52] தெளிவில் பூப்பேன்

[01:25.58] காணாதொரு வெளிச்சத்தில்

[01:27.44] எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்

[01:30.35] வீழாதொரு நிலையினிலே

[01:32.76] அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

[01:35.95] ஆழ் என்பது மெய்ஞான போதம்

[01:38.08] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:40.20] எல்லாமும்

[01:41.26] போல் என்பது பகட்டு வாதமே

[01:43.65] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:45.78] எல்லாமும்

[01:46.57] நாள் என்பதும் பொய்யான காலம்

[01:48.97] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:50.82] எல்லாமும்

[01:51.89] கேள் என்குதே தெளிந்த ஞானமே

[01:54.29] கேட்க கேட்க ஓசை மீறிக்

[01:56.42] கேட்கிறதே..

[02:39.99] ஆறறிவென்றே

[02:42.11] அலட்டாமல் எளிதாய் நானும்

[02:45.03] ஓர்உயிர் என்றே இருப்பேனே

[02:49.55] குழம்பாமல்

[02:50.61] யார் உடைத்தாலும்

[02:53.00] சிரிக்கின்ற பொம்மைப்போலே

[02:55.65] நான் என் இயல்பில் இருப்பேன்

[03:01.23] ஓடும்நதியின் மேலே

[03:03.37] உட்காரும் தட்டான் போலே

[03:06.28] லேசாக அமர்ந்தே பறப்பேனே

[03:10.00] புவிமேலே

[03:11.86] தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்

[03:14.25] தான் தூங்கும் மழலைப்போலே

[03:16.66] பேரன்பைப் போலி செய்வேனே

[03:20.90] நிறுத்தாமல்..

[03:22.76] பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

[03:25.16] இப்போது இப்போது இப்போது

[03:27.01] கண்ணாக

[03:28.37] பேருண்மையில் கலந்துபோகிறேன்

[03:30.50] இப்போது இப்போது இப்போது

[03:32.89] ஒன்றாக

[03:33.42] பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்

[03:35.28] இப்போது இப்போது இப்போது

[03:37.67] நன்றாக

[03:38.46] பேராற்றலில் கரைந்துபோகிறேன்

[03:40.86] பூத பேத வாத மோகம்

[03:43.25] மறைகிறதே..

[04:16.25] நான் எனக்குள்ளே

[04:18.10] அசைந்தேனே ஊஞ்சல்போலே

[04:20.77] யார் எனை அசைத்தே ரசித்தாரோ

[04:25.29] சலிக்காமல்

[04:26.60] பேரலைமேலே

[04:29.27] விளையாடும் காகம்போலே

[04:31.65] யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

[04:36.97] சீறும் புலியைப் பார்த்தே

[04:39.65] சிரிக்கின்ற சிசுவைப் போலே

[04:42.31] கோபங்கள் மறந்தே சிரிப்பேனே

[04:46.56] பதறாமல்

[04:47.89] பூவிழும் குளத்தின்மேலே

[04:50.54] உருவாகும் வளையல்போலே

[04:53.21] நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே

[04:56.92] கதறாமல்

[04:58.53] வாகாய் வாகாய்

[05:00.42] வாழ்கிறேன்

[05:03.88] பாகாய்ப் பாகாய்

[05:05.47] ஆகிறேன்

[05:09.19] தோதாய்த் தோதாய்ப்

[05:11.06] போகிறேன்

[05:14.51] தூதாய்த் தூதாய்

[05:16.38] ஆகிறேன்

[05:20.36] போதாய்ப் போதாய்ப்

[05:32.32] பூக்கிறேன்

[05:36.03] காதாய்க் காதாய்க்

[05:37.89] கேட்கிறேன்

[05:41.61] ஆரோ ஆராரிரிரோ

[05:44.27] தாலாட்டும் காலம்

[05:45.33] தலையாட்டும் ஞானம்

[05:47.18] ஆரோ ஆராரிரிரோ

[05:48.51] தாய்ப்போல் பாடுதே..

[05:52.23] ஆரோ..

[05:53.31] ஆரோ ஆராரிரிரோ

[05:57.03] ஆரோ..