Anbe Anbe
[00:31.72] அன்பே அன்பே கொல்லாதே
[00:35.96] கண்ணே கண்ணை கிள்ளாதே
[00:40.21] பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
[00:47.96] ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
[00:55.46] அன்பே அன்பே கொல்லாதே
[00:59.47] கண்ணே கண்ணை கிள்ளாதே
[01:34.47] பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
[01:38.72] அடடா பிரம்மன் கஞ்சனடி
[01:42.72] சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
[01:46.72] ஆஹா அவனே வள்ளலடி
[01:50.72] மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
[01:54.32] ரவிவர்மன் எழுதிய வதனமடி
[01:58.62] நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
[02:02.63] சிற்பிகள் செதுக்கிய உருவமடி
[02:06.38] இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
[02:10.37] நீதான் நீதான் அழகியடி
[02:14.38] இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
[02:18.37] என்னை வதைப்பது கொடுமையடி
[02:22.12] அன்பே அன்பே கொல்லாதே
[02:26.37] கண்ணே கண்ணை கிள்ளாதே
[02:45.44] கொடுத்து வைத்தப் பூவே பூவே
[02:49.77] அவள் கூந்தல் மணம் சொல்வாயா
[02:53.52] கொடுத்து வைத்த நதியே நதியே
[02:57.52] அவள் குளித்த சுகம் சொல்வாயா
[03:01.53] கொடுத்து வைத்த கொலுசே
[03:05.53] கால் அழகைச் சொல்வாயா
[03:09.82] கொடுத்து வைத்த மணியே
[03:13.32] மார் அழகைச் சொல்வாயா
[03:33.07] அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
[03:36.83] அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
[03:40.83] உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
[03:45.07] உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
[03:52.82] மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
[03:56.34] மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
[04:00.34] தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
[04:04.58] நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
[04:08.33] பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
[04:12.33] பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
[04:16.09] தேவதை குளித்த துளிகளை அள்ளி
[04:20.35] தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
[04:24.08] அன்பே அன்பே கொல்லாதே
[04:32.08] அன்பே அன்பே கொல்லாதே
[04:35.83] கண்ணே கண்ணை கிள்ளாதே
[04:39.83] பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
[04:47.82] ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
[04:55.58] அன்பே அன்பே கொல்லாதே
[04:59.57] கண்ணே கண்ணை கிள்ளாதே
