03 Paarthene (Amman Song)
[00:06.63] பார்த்தேனே உயிரின் வழியே
[00:11.98] யார் கண்ணும் காணா முகமே
[00:17.92] கல் என்று நினைத்தேன் உனையே
[00:23.00] நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா?
[00:28.92] எதில் நீ இருந்தாய்?
[00:31.74] எங்கோ மறைந்தாய்
[00:34.58] உன்னை தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய்
[00:41.08] இது போதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா?
[00:45.89] இறைவா இது தான நிறைவா?
[00:51.56] உணர்ந்தேன் உனையே உனையே
[00:57.77] மறந்தேன் எனையே எனையே
[01:03.73] பார்த்தேனே உயிரின் வழியே
[01:09.65] யார் கண்ணும் காணா முகமே
[01:15.04] Oh கல் என்று நினைத்தேன் உனையே
[01:20.68] நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா?
[01:38.18] வேதங்கள் மொத்தம் ஓதி
[01:41.31] யாகங்கள் நித்தம் செய்து
[01:44.13] பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம்
[01:49.77] பசி என்று தன் முன் வந்து
[01:54.86] கை ஏந்தி கேட்கும் போது
[01:56.00] தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம்
[02:01.64] உன்னை காண பல கோடி
[02:03.63] இங்கு வாரி இறைக்கிறார்கள்
[02:06.45] எளிதாக உன்னை சேர
[02:09.30] இங்கு யார் நினைக்கிறார்கள்?
[02:12.11] அலங்காரம் அதில் நீ இல்லை
[02:14.93] அகங்காரம் மனதில் இல்லை
[02:17.76] துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்
[02:23.74] உணர்ந்தேன் உனையே உனையே
[02:28.80] மறந்தேன் எனையே எனையே
[02:58.07] அகம் நீ ஜகம் நீ
[03:00.86] அணுவான உலகின் அகலம் நீ
[03:04.32] எறும்பின் இதய ஒளி நீ
[03:06.41] களிரின் துதிக்கை கணமும் நீ
[03:09.67] ஆயிரம் கை உண்டு என்றால்
[03:13.56] நீ ஒரு கை தர கூடாதா?
[03:16.20] ஈராயிரம் கண் கொண்டாய்
[03:19.03] உன் ஒரு கண் என்னை பாராதா?
[03:21.85] உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே
[03:27.51] பார்த்தேனே உயிரின் வழியே
[03:33.20] யார் கண்ணும் காணா முகமே
[03:38.56] கல் என்று நினைத்தேன் உனையே
[03:44.52] நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா?
