Journey
[00:10.20] ♫....
[00:31.47] 𝄞.........
[00:53.25] நான் என்பது யாரோ பெருந்திரளினிலே..
[00:57.52] ஏடே
[00:58.05] நான் என்பதை வீசி எழுந்தேனே..
[01:02.58] மனமே..
[01:03.64] தான் என்பது போகும்
[01:06.03] பெருங்கணத்தினிலே.. கூவி
[01:09.22] வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய்
[01:12.41] அருளாய்ப் பேச
[01:14.28] போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி
[01:18.00] மூழ்கிப் போவேன்
[01:19.59] வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
[01:22.25] தெளி தெளி தெளி தெளி
[01:23.84] தெளிவில் பூப்பேன்
[01:24.91] காணாதொரு வெளிச்சத்தில்
[01:27.30] எனை நானே அட
[01:28.89] முழுதாய்ப் பார்ப்பேன்
[01:30.48] வீழாதொரு நிலையினிலே அடப்
[01:33.14] பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
[01:35.00] ...💥...
[01:35.55] ஆழ் என்பது மெய்ஞான போதம்
[01:38.22] இப்போதில் இப்போதில் இப்போதில்
[01:40.39] எல்லாமும்
[01:40.92] போல் என்பது பகட்டு வாதமே
[01:43.59] இப்போதில் இப்போதில் இப்போதில்
[01:45.72] எல்லாமும்
[01:46.25] நாள் என்பதும் பொய்யான காலம்
[01:48.91] இப்போதில் இப்போதில் இப்போதில்
[01:51.03] எல்லாமும்
[01:51.56] கேள் என்குதே தெளிந்த ஞானமே
[01:54.22] கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே..
[02:07.77] ♫..
[02:37.25] ஆறறிவென்றே அலட்டாமல்
[02:42.83] எளிதாய் நானும்
[02:45.22] ஓர்உயிர் என்றே இருப்பேனே
[02:49.47] குழம்பாமல்
[02:50.27] யார் உடைத்தாலும்
[02:52.92] சிரிக்கின்ற பொம்மைப்போலே
[02:55.32] நான் என் இயல்பில் இருப்பேன்
[03:00.64] ஓடும்நதியின் மேலே
[03:03.56] உட்காரும் தட்டான் போலே
[03:06.22] லேசாக அமர்ந்தே பறப்பேனே...புவிமேலே
[03:11.53] தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
[03:13.92] தான் தூங்கும் மழலைப்போலே
[03:16.86] பேரன்பைப் போலி செய்வேனே
[03:20.84] நிறுத்தாமல்..!
[03:22.44] பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
[03:24.83] இப்போது இப்போது இப்போது கண்ணாக
[03:27.48] பேருண்மையில் கலந்துபோகிறேன்
[03:30.14] இப்போது இப்போது இப்போது ஒன்றாக
[03:32.80] பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
[03:35.45] இப்போது இப்போது இப்போது நன்றாக
[03:38.11] பேராற்றலில் கரைந்துபோகிறேன்
[03:40.77] பூத பேத வாத மோகம் மறைகிறதே..
[03:45.02] 𝄞...
[04:15.33] நான் எனக்குள்ளே
[04:18.25] அசைந்தேனே ஊஞ்சல்போலே
[04:20.91] யார் எனை அசைத்தே ரசித்தாரோ
[04:25.16] சலிக்காமல்
[04:25.95] பேரலைமேலே விளையாடும் காகம்போலே
[04:30.21] யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
[04:37.14] சீறும் புலியைப் பார்த்தே
[04:39.80] சிரிக்கின்ற சிசுவைப் போலே
[04:42.19] கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
[04:46.70] பதறாமல்..
[04:47.50] பூவிழும் குளத்தின்மேலே
[04:50.42] உருவாகும் வளையல்போலே
[04:52.81] நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
[04:57.59] கதறாமல்..
[04:58.39] வாகாய் வாகாய் வாழ்கிறேன்
[05:03.70] பாகாய்ப் பாகாய் ஆகிறேன்
[05:09.02] தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன்....♫
[05:14.86] போதாய்ப் போதாய்ப்
[05:33.20] பூக்கிறேன்
[05:35.86] காதாய்க் காதாய்க்
[05:37.19] கேட்கிறேன்
[05:41.70] ஆரோ ஆராரிரிரோ....
[05:43.57] தாலாட்டும் காலம்
[05:44.89] தலையாட்டும் ஞானம்
[05:47.02] ஆரோ ஆராரிரிரோ
[05:48.61] தாய்ப்போல் பாடுதே..
[05:51.80] ஆரோ..
[05:53.13] ஆரோ ஆராரிரிரோ
[05:57.39] ஆரோ..
