Lrc Player

Thaarame-Thaarame-MassTamilan.io

Unknown artist
[03:48.26]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.98] வேறதுவும் தேவை இல்லை

[00:13.86] நீ மட்டும் போதும்

[00:16.25] கண்ணில் வைத்து காத்திருப்பேன்

[00:18.11] என்னவானாலும்

[00:21.56] உன் எதிரில் நான் இருக்கும்

[00:23.42] ஒவ்வொரு நாளும்

[00:26.34] உச்சி முதல் பாதம் வரை

[00:28.47] வீசுது வாசம்

[00:30.33] தினமும் ஆயிரம் முறை

[00:31.65] பார்த்து முடித்தாலும்

[00:35.38] இன்னும் பார்த்திட சொல்லி

[00:37.50] பாழும் மனம் ஏங்கும்

[00:43.07] தாரமே தாரமே வா

[00:47.86] வாழ்வின் வாசமே வாசமே

[00:51.58] நீ தானே

[00:54.23] தாரமே தாரமே வா

[00:57.95] எந்தன் சுவாசமே சுவாசமே

[01:01.95] நீ உயிரே வா….ஆஅ….

[01:07.79] மேலும் கீழும் ஆடும் உந்தன்

[01:20.02] மாய கண்ணாலே

[01:22.67] மாறுவேடம் போடுது என் நாட்கள்

[01:25.59] தன்னாலே….ஏ….

[01:28.25] ஆயுள் ரேகை முழுவதுமாய்

[01:30.11] தேயும் முன்னாலே

[01:33.03] ஆளும் வரை வாழ்ந்திடலாம்

[01:35.42] காதலின் உள்ளே

[01:37.28] இந்த உலகம் தூளாய்

[01:39.40] உடைந்து போனாலும்

[01:42.33] அதன் ஒரு துகளில்

[01:44.45] உன்னை கரை சேர்ப்பேன்

[01:48.70] தாரமே தாரமே வா

[01:52.15] வாழ்வின் வாசமே வாசமே

[01:54.55] நீ தானே

[01:58.53] தாரமே தாரமே வா

[02:02.25] எந்தன் சுவாசமே சுவாசமே

[02:06.50] நீ உயிரே வா….ஆஅ….

[02:21.90] ♪

[02:24.83] நீ நீங்கிடும் நேரம்

[02:26.95] காற்றும் பெரும் பாரம்

[02:31.73] உன் கைத்தொடும் நேரம்

[02:37.05] தீ மீதிலும் ஈரம்

[02:41.03] நீ நடக்கும் பொழுது

[02:42.36] நிழல் தரையில் படாது

[02:45.01] உன் நிழலை எனது உடல்

[02:47.40] நழுவ விடாது

[02:50.06] பேரழகின் மேலே ஒரு

[02:52.45] துரும்பும் தொடாது

[02:55.37] பிஞ்சு முகம் ஒரு நொடியும்

[02:57.50] வாடக்கூடாது

[02:59.62] உன்னை பார்த்திருப்பேன்

[03:01.48] விழிகள் மூடாது

[03:04.67] உன்னை தாண்டி

[03:06.26] எதுவும் தெரியகூடாது ஹோ ஓ ஓ

[03:10.51] தாரமே தாரமே வா

[03:15.03] வாழ்வின் வாசமே வாசமே

[03:18.21] நீ தானே

[03:20.89] தாரமே தாரமே வா

[03:24.60] எந்தன் சுவாசமே சுவாசமே

[03:28.86] நீ உயிரே வா….ஆஅ….