Kurumugil
[00:09.49] குருமுகில்களை சிறு முகைகளில் யார் தூவினார்
[00:14.54] மழைக் கொண்டு கவிதை தீட்டினார்
[00:18.79] இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்
[00:24.10] சிரித்திடும் சிலையை காட்டினார்
[00:27.82] எறும்புகள் சுமந்து போகுதே
[00:30.21] சர்க்கரைப் பாறை ஒன்றினை
[00:32.60] இருதயம் சுமந்து போகுதே
[00:34.99] இனிக்கிற காதல் ஒன்றினை
[00:37.38] என் சின்ன நெஞ்சின் மீது
[00:39.51] இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்
[00:43.49] முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
[00:48.01] வானோடு தீட்டி வைத்ததார்?
[00:52.79] தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
[00:57.57] நிலாவைக் கூட்டி வந்ததார்?
[01:21.74] கம்பன் சொல்ல வந்து
[01:24.13] ஆனால் கூச்சங் கொண்டு
[01:26.53] எழுதா ஓர் உவமை நீ
[01:31.30] வர்ணம் சேர்க்கும் போது
[01:33.97] வர்மன் போதைக் கொள்ள
[01:36.08] முடியா ஓவியமும் நீ
[01:40.08] எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
[01:44.37] உயிரே இல்லாத கல் கூட காமமுறும்
[01:49.15] உன் மீது காதல் கொண்ட
[01:51.27] மானுடன் தான் என்ன ஆகுவான்
[01:55.26] முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
[02:00.05] வானோடு தீட்டி வைத்ததார்?
[02:04.83] தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
[02:09.62] நிலாவைக் கூட்டி வந்ததார்?
[02:34.05] உடையால் மூடி வைத்தும்
[02:36.18] இமைகள் சாத்தி வைத்தும்
[02:38.84] அழகால் என்னைக் கொல்கிறாய்
[02:43.35] அருவிக் கால்கள் கொண்டு
[02:46.01] ஓடை இடையென்றாகி
[02:48.13] கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
[02:51.85] கடலில் மீனாக நானாக ஆணையிடு
[02:56.49] அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
[03:01.29] பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி
[03:04.49] ஜென்மம் வேண்டுமே
[03:07.42] முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
[03:12.21] வானோடு தீட்டி வைத்ததார்?
[03:16.99] தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
[03:22.04] நிலாவைக் கூட்டி வந்ததார்?
