Lrc Player

Aagayam

Unknown artist
[05:21.16]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.22] கல் கல்

[00:06.75] கல் கல்

[00:08.08] கலங் கலங்

[00:09.14] கல் கல்

[00:10.47] கல் கல்

[00:11.53] கல் கல்

[00:12.59] கலங் கலங்

[00:13.66] கல் கல்

[00:15.25] ஆகாயம் இத்தனை நாள்

[00:17.37] மண்மீது வீழாமல்

[00:19.78] தூணாக தாங்குவது

[00:22.20] காதல் தான்

[00:24.59] ஆண்டாண்டு காலங்கள்

[00:26.98] பூலோகம் பூப்பூக்க

[00:29.38] அழகான காரணமே

[00:31.77] காதல் தான்

[00:33.89] பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை

[00:36.28] நாட்கள் ஏழும் காதலின் கிழமை

[00:38.67] ஒன்பது கோள்களும்

[00:40.00] காதலைச் சுற்றி வரும்

[00:42.13] மரம் ஏற ஏணியைத் தந்தால்

[00:44.52] மலையில் ஏறி கொடியேற்றும்

[00:46.94] குண்டூசி கையில் தந்தால்

[00:49.33] கிணறே தோண்டி விடும்

[00:51.72] வெறும் கல்லை வைரக்கல்லாய்

[00:53.84] காதல் பார்வை மாற்றிவிடும்

[00:56.52] வெந்நீரில் விட்டால் கூட

[00:58.64] காதல் மீன் நீந்தும்

[01:20.15] கல் கல்

[01:20.95] கல் கல்

[01:22.02] கலங் கலங்

[01:23.34] கல் கல்

[01:24.67] கல் கல்

[01:25.74] கல் கல்

[01:26.80] கலங் கலங்

[01:27.86] கல் கல்

[02:11.96] கஷ்டம் காதலுக்கு இஷ்டம்

[02:15.67] வெற்றி பெற வேண்டும் என்றால்

[02:17.54] காதல் எதையும் தாங்கிடுமே

[02:20.98] முட்டும் கதவுகளை‌த் தட்டும்

[02:24.97] சறுக்கி விழும் பாதை எல்லாம்

[02:27.36] வெற்றிப் படியாய் மாற்றிடுமே

[02:30.67] அண்ணாந்து பார்க்காமல்

[02:32.80] விண்மீனை வீழ்த்திவிடும்

[02:35.19] துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே

[02:39.70] இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே

[02:42.09] இருமனம் விரும்பி துணிந்து

[02:43.96] உடையுமே

[02:45.01] பயங்களும் தயக்கமும் விடுமுறை

[02:46.18] எடுத்திடுமே

[02:48.30] வேரோடு வேர்வை ஊற்றி

[02:50.69] காதல் என்றும் வென்று விடும்

[02:52.83] வெறியோடு ஓடும் போது

[02:55.22] தடையை உடைத்து விடும்

[02:57.61] கடல் நீரைத் தேக்கும் போது

[02:59.74] உப்பாய் தானே மாறிவிடும்

[03:02.43] கண்ணீரை தேக்கும் காதல்

[03:04.82] முத்தாய் மாறிவிடும்

[03:26.07] கல் கல்

[03:26.86] கல் கல்

[03:27.93] கலங் கலங்

[03:29.25] கல் கல்

[03:30.32] கல் கல்

[03:31.64] கல் கல்

[03:32.44] கலங் கலங்

[03:34.08] கல் கல்

[03:54.26] காதல் கேட்டுக் கொண்டு வருமா?

[03:58.24] தோட்டத்துக்குள் பறவை வந்தால்

[03:59.83] வேலி என்ன தடுத்திடுமா?

[04:03.28] காதல் காட்டுச் செடி போலே

[04:07.27] கட்டளைகள் போடும் போதும்

[04:09.16] பூக்கள் பூக்க மறுத்திடுமா ?

[04:12.91] புலி வாழும் குகையுள்ளே

[04:15.04] கிளி வாழும் வீரத்தை

[04:17.43] மனதோடு தந்திடுமே

[04:19.82] காதல் தான்

[04:21.94] இது போகும் வழியோ வெற்றுப்பாதை

[04:24.61] திரும்பும் வழியோ வெற்றிப்பாதை

[04:26.75] விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது

[04:30.75] கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

[04:32.88] வழியில் மரங்கள் கிடையாது

[04:35.28] ஆனாலும் கண்டம் தாண்டும்

[04:37.54] சிறகுகள் வலிக்காது

[04:39.94] மலையேறும் எறும்பின் கால்கள்

[04:42.33] வெயிலை மிதித்து உடையாது

[04:44.72] மனதோடு காதல் வந்தால்

[04:46.84] மனிதா தடையேது

[05:08.37] கல் கல்

[05:09.17] கல் கல்

[05:10.50] கலங் கலங்

[05:11.57] கல் கல்

[05:12.62] கல் கல்

[05:13.96] கல் கல்

[05:15.01] கலங் கலங்

[05:16.35] கல் கல்