திருவாசகம்
[00:45.81] நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
[01:09.58] இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
[01:16.31] கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
[01:21.56] ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
[01:27.81] ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
[01:33.81] வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
[01:39.58] பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
[01:45.54] புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
[01:51.59] கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
[01:57.57] சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
[02:03.58] ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
[02:09.59] தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
[02:15.56] நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
[02:21.56] மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
[02:27.60] சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
[02:33.81] ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
[02:39.81] சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
[02:45.59] அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
[02:57.81] சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
[03:03.58] முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
[04:01.57] கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
[04:17.81] எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
[04:20.31] விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
[04:21.81] எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
[04:26.07] பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
[04:31.83] புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
[04:37.79] பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
[04:43.58] கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
[04:50.32] வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
[04:55.35] செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
[05:01.56] எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
[05:07.58] மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
[05:13.30] உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
[05:19.56] மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
[05:26.06] ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
[05:31.56] வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
[05:37.31] பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
[05:43.32] மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
[05:49.56] எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
[05:55.31] அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
[06:01.32] ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
[06:07.33] ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
[06:13.57] போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
[06:19.81] நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
[06:25.58] மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
[07:32.31] கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
[07:39.32] சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
[07:48.83] பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
[07:54.07] நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
[08:01.87] மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
[08:09.31] மறைந்திட மூடிய மாய இருளை
[08:16.82] அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
[08:26.31] புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
[08:31.57] மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
[08:38.57] மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
[08:46.32] விலங்கு மனத்தால், விமலா உனக்கு
[08:53.57] கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
[09:00.82] நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
[09:08.32] நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
[09:15.81] நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
[09:23.31] தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
[09:31.09] மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
[09:38.07] தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
[09:45.56] பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
[09:52.58] நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
[09:59.81] பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
[10:07.82] ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
[10:14.81] ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
[10:23.07] நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
[10:29.81] இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
[10:37.07] அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
[10:45.31] சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
[10:52.07] ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
[10:58.81] ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
[11:06.31] கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
[11:13.82] நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
[11:21.56] போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
[11:28.83] காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
[11:35.58] ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
[11:43.31] தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
[12:24.56] மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
[12:30.06] தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
[12:33.57] ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
[12:37.84] வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
[12:42.81] ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
[12:46.57] போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
[12:51.58] மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
[12:56.08] கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
[13:00.82] நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
[13:09.29] தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
[13:10.06] அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
[13:14.81] சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
[13:17.06] சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
[13:23.56] செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
[13:45.31] பல்லோரும் ஏத்தப் பணிந்து.
[14:05.57] திருச்சிற்றம்பலம்
