Mazhai Thulli
[00:19.46] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
[00:21.71] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
[00:24.20] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!
[00:29.19] (மழைத்துளி)
[01:02.69] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க!
[01:07.22] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க!
[01:12.20] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
[01:16.93] என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
[01:31.19] ♪
[01:34.21] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
[01:36.21] சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்!
[02:01.94] (மழைத்துளி..)
[02:35.20] தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
[02:39.70] எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
[02:44.22] என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
[02:48.94] சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
[03:06.19] மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
[03:15.44] விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
[03:25.69] நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
[03:27.97] நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
[03:30.21] கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
[03:35.44] (மழைத்துளி..)
[04:28.20] மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்!
[04:32.44] உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .
[04:39.94] நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!
[04:44.44] இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .
[04:56.70] ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!
[05:01.21] தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!
[05:06.44] புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!
[05:10.96] போர்க்களம் நீ புகும்போது - முள்
[05:13.69] தைப்பது கால் அறியாது!
[05:15.69] மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?
[05:25.46] கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!
[05:34.18] (ஆலாலகண்டா)
[06:07.69] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
[06:09.94] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
[06:12.18] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!
