Elangaathu Veesudhey
[00:31.70] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[00:38.21] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[00:51.70] வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
[00:58.20] மேகம் முழிச்சு கேக்குதே
[01:01.95] கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
[01:08.19] மழைச்சாரல் தெறிக்குதே
[01:11.20] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[01:18.21] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[01:24.70] மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
[01:31.44] புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
[01:38.45] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[01:44.94] வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
[01:50.93] மேகம் முழிச்சு கேக்குதே
[02:31.95] பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
[02:35.45] நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
[02:38.45] ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
[02:41.94] உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
[02:45.45] அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
[02:51.95] அன்னமடி இந்த நிலம் போல
[02:55.19] சிலருக்குத் தான் மனசு இருக்கு
[02:58.71] உலகம் அதில் நிலைச்சு இருக்கு
[03:02.20] நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
[03:08.70] யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
[03:15.46] உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
[03:22.21] குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
[03:28.45] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[03:34.94] வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
[03:40.94] மேகம் முழிச்சு கேக்குதே
[04:18.95] ஓ… மனசுல என்ன ஆகாயம்
[04:22.20] தினம்தினம் அது புதிர் போடும்
[04:25.20] ரகசியத்தை யாரு அறிஞ்சா
[04:28.44] அதிசயத்தை யாரு புரிஞ்சா
[04:35.70] விதை விதைக்கிற கை தானே
[04:38.95] மலர் பறிக்குது தினம்தோறும்
[04:41.95] மலர் தொடுக்க நாரு எடுத்து
[04:45.19] யார் தொடுத்தா மாலையாச்சு
[04:48.70] ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
[04:55.43] மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
[05:02.19] தாலாட்டு கேட்டிடாமலே
[05:08.45] தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
[05:15.44] கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
[05:21.45] மழைச்சாரல் தெறிக்குதே
[05:24.70] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[05:31.45] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[05:38.96] மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
[05:45.43] புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
