Lrc Player

Kan pesum

Unknown artist
[05:50.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.78] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

[00:32.81] காத்திருந்தால் பெண் கனிவதில்லை

[00:35.55] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய

[00:38.82] கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை

[00:51.05] காற்றில் இலைகள் பறந்தபிறகும்

[00:53.57] கிளையின் தழும்புகள் அழிவதில்லை

[00:56.57] காயம் நூறு கண்டபிறகும்

[00:59.81] உன்னை உள்மனம் மறப்பதில்லை

[01:05.31] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்

[01:06.55] வருகிற வலி அவள் அறிவதில்லை

[01:08.31] கனவினிலும் தினம் நினைவினிலும்

[01:11.55] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

[01:13.81] (கண்பேசும் வார்த்தைகள்)

[02:26.04] காட்டிலே காயும் நிலவு

[02:28.81] கண்டுகொள்ள யாரும் இல்லை

[02:31.81] கண்களின் அனுமதி வாங்கி

[02:34.29] காதலும் இங்கே வருவதில்லை

[02:37.81] தூரத்தில் தெரியும் வெளிச்சம்

[02:40.56] பாதைக்குச் சொந்தமில்லை

[02:43.81] மின்னலின் ஒளியை பிடிக்க

[02:46.06] மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை

[02:48.58] விழி உனக்குச் சொந்தமடி

[02:51.78] வேதனைகள் எனக்குச் சொந்தமடி

[02:55.06] அலை கடலைக் கடந்தபின்னே

[02:57.55] நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி

[03:00.81] (கண்பேசும் வார்த்தைகள்)

[03:55.06] உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது

[03:57.06] மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது

[04:00.07] ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது

[04:02.56] இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது

[04:06.06] பனித்துளி வந்து மோதியதால்

[04:08.82] இந்த முள்ளும் இங்கே துண்டானது

[04:12.05] பூமியில் உள்ள பொய்களெல்லாம்

[04:14.81] அட புடவைகட்டி பெண்ணானது

[04:17.81] ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்

[04:20.56] மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்

[04:23.80] சிரிப்புவரும் அழுகைவரும்

[04:26.81] காதலில் இரண்டுமே கலந்துவரும்

[04:29.81] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்

[04:32.81] வருகிற வலி அவள் அறிவதில்லை

[04:35.57] கனவினிலும் தினம் நினைவினிலும்

[04:38.56] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

[04:41.84] (கண்பேசும் வார்த்தைகள்)