Partha-Muthal
[00:19.33] பார்த்த முதல் நாளே
[00:25.58] உன்னை பார்த்த முதல் நாளே
[00:30.84] காட்சிப் பிழை போலே
[00:34.34] உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே
[00:39.83] ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
[00:44.07] கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
[00:48.57] என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
[00:58.58] காட்டிக் கொடுக்கிறதே
[01:01.08] கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
[01:06.58] காதல் வழிகிறதே
[01:10.09] கண்ணில் காதல் வழிகிறதே
[01:15.34] உன் விழியில் வழியும் பிரியங்களை
[01:20.08] பார்த்தே கடந்தேன் பகல் இரவை
[01:24.35] உன் அலாதி அன்பினில்
[01:27.07] நனைந்தபின் நனைந்தபின்
[01:29.83] நானும் மழையானேன்
[01:57.09] காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
[02:00.09] தேடிப் பிடிப்பதுந்தன் முகமே
[02:04.09] தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதுமுன் முகமே
[02:11.33] எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
[02:20.08] நீயறிந்து நடப்பதாய் வியப்பேன்
[02:24.33] உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்
[02:29.33] நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
[02:33.58] போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
[02:42.08] சரி என்று சரி என்று
[02:44.33] உனை போகச் சொல்லி
[02:47.09] கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
[02:51.09] கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
[02:55.83] காட்டிக் கொடுக்கிறதே
[02:58.83] கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
[03:04.33] காதல் வழிகிறதே
[03:08.08] கண்ணில் காதல் வழிகிறதே
[03:12.58] ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
[03:17.58] கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
[03:22.32] உன் அலாதி அன்பினில்
[03:25.58] நனைந்தபின் நனைந்தபின்
[03:28.08] நானும் மழையானேன்
[04:07.07] உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
[04:15.08] தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
[04:19.85] கனவாக வந்ததென்று நினைத்தேன்
[04:24.58] யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
[04:28.57] சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
[04:33.08] நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
[04:42.31] கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
[04:51.08] கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
[04:55.82] சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
[04:59.58] சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
[05:04.84] பார்த்த முதல் நாளே
[05:08.58] உன்னை பார்த்த முதல் நாளே
[05:13.32] காட்சிப் பிழை போலே
[05:18.08] உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே
[05:21.10] ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
[05:26.84] கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
[05:30.82] என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
