Sivapuranam
[00:03.18] திருசிற்றம்பலம்
[00:09.93] தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
[00:21.67] அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
[00:24.95] மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
[00:30.43] திருவாசகம் என்னும் தேன்
[00:36.43] திருச்சிற்றம்பலம்
[00:37.41] நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
[00:39.93] இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
[00:48.70] கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
[00:53.42] ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
[00:58.45] ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5
[01:03.19] வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
[01:07.68] பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
[01:12.68] புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
[01:17.92] கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
[01:24.43] சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
[01:30.65] ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
[01:34.18] தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
[01:38.92] நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
[01:43.66] மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
[01:48.65] சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
[01:53.19] ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
[01:58.94] சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
[02:02.94] அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
[02:05.92] சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
[02:09.41] முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
[02:13.42] கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
[02:17.41] எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
[02:20.43] விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
[02:25.17] எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
[02:29.67] பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25
[02:34.66] புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
[02:39.15] பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
[02:43.18] கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
[02:48.18] வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
[02:52.18] செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
[02:56.66] எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
[03:01.94] மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
[03:06.18] உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
[03:10.93] மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
[03:16.17] ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
[03:21.42] வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
[03:25.17] பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
[03:30.68] மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
[03:34.69] எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
[03:39.67] அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
[03:44.15] ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
[03:48.44] ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
[03:54.43] போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
[03:58.69] நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
[04:03.92] மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
[04:08.19] கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
[04:13.16] சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
[04:17.68] பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
[04:22.68] நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
[04:28.42] மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
[04:32.92] மறைந்திட மூடிய மாய இருளை
[04:36.44] அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
[04:40.94] புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
[04:45.43] மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
[04:49.92] மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
[04:53.91] விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
[04:58.17] கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
[05:01.94] நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
[05:06.44] நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
[05:12.17] நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
[05:16.18] தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
[05:20.66] மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
[05:24.69] தேசனே தேனார் அமுதே சிவபுரானே
[05:27.68] பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
[05:31.68] நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
[05:35.18] பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
[05:39.17] ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
[05:43.16] ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
[05:47.16] நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
[05:51.95] இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
[05:55.93] அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
[06:00.17] சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
[06:05.43] ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
[06:09.93] ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
[06:13.94] கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
[06:19.93] நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
[06:25.44] போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
[06:29.19] காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
[06:33.94] ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
[06:38.90] தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
[06:43.68] மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
[06:48.42] தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
[06:53.16] ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
[06:58.44] வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
[07:01.69] ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85
[07:06.70] போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
[07:11.17] மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
[07:15.66] கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
[07:18.91] நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
[07:23.69] தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
[07:28.93] அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
[07:33.18] சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
[07:37.66] சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
[07:41.93] செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
[07:46.66] பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
[07:51.68] திருச்சிற்றம்பலம்
