Lrc Player

Pachchai-Nirame

Unknown artist
[05:58.50]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.64] சகியே...

[00:02.87] சினேகிதியே...

[00:06.14] காதலில் காதலில் காதலில் நிறமுண்டு

[00:10.91] சகியே...

[00:13.62] சினேகிதியே...

[00:16.62] என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

[00:44.14] பச்சை நிறமே பச்சை நிறமே

[00:46.88] இச்சை ஊட்டும் பச்சை நிறமே

[00:49.64] புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே

[00:52.62] எனக்கு சம்மதம் தருமே

[00:58.38] பச்சை நிறமே பச்சை நிறமே

[01:00.86] இலையின் இளமை பச்சை நிறமே

[01:03.41] உந்தன் நரம்பும் பச்சை நிறமே

[01:06.14] எனக்கு சம்மதம் தருமே

[01:08.89] எனக்கு சம்மதம் தருமே

[01:11.89] எனக்கு சம்மதம் தருமே

[01:36.15] கிளையில் காணும் கிளியின் மூக்கு

[01:38.89] விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு

[01:41.62] புத்தம் புதிதாய் ரத்த ரோஜா

[01:44.40] பூமி தொடாத பிள்ளையின் பாதம்

[01:52.65] எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

[01:57.92] எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

[02:03.39] அந்திவானம் அரைக்கும் மஞ்சள்

[02:06.14] அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

[02:08.89] தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்

[02:11.66] கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

[02:14.38] மஞ்சள் மஞ்சள் மஞ்சள்

[02:19.90] மாலை நிலவின் மரகத மஞ்சள்

[02:25.39] எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

[02:29.66] சகியே...

[02:29.90] சினேகிதியே...

[02:36.62] காதலில் காதலில் காதலில் நிறமுண்டு

[02:40.88] சகியே

[02:43.65] சினேகிதியே

[02:46.38] என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

[02:52.40] அலையில்லாத ஆழி வண்ணம்

[02:58.13] முகிலில்லாத வானின் வண்ணம்

[03:03.39] மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்

[03:09.14] குவளைப் பூவில் குழைத்த வண்ணம்

[03:13.88] ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்

[03:19.89] எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

[03:24.88] எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

[03:52.69] இரவின் நிறமே இரவின் நிறமே

[03:57.88] கார்காலத்தின் மொத்த நிறமே

[04:03.64] காக்கைச் சிறகில் காணும் நிறமே

[04:08.65] பெண்மை எழுதும் கண்மை நிறமே

[04:14.38] வெயிலில் பாடும் குயிலின் நிறமே

[04:19.89] எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

[04:25.91] எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

[04:30.13] சகியே

[04:32.87] சினேகிதியே

[04:36.14] காதலில் காதலில் காதலில் நிறமுண்டு

[04:41.13] சகியே

[04:44.14] சினேகிதியே

[04:47.12] என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

[04:52.65] வெள்ளை நிறமே வெள்ளை நிறமே

[04:58.39] மழையில் உடையும் தும்பை நிறமே

[05:03.65] வெள்ளை நிறமே வெள்ளை நிறமே

[05:06.40] விழியில் பாதி உள்ள நிறமே

[05:08.88] மழையில் உடையும் தும்பை நிறமே

[05:11.88] உனது மனசின் நிறமே

[05:14.63] உனது மனசின் நிறமே

[05:17.43] உனது மனசின் நிறமே