Rekkai Mulaithen
[00:00.48] ரெக்கை முளைத்தேன்
[00:02.73] ரெக்கை முளைத்தேன்
[00:05.52] உனை உடன் வா என்று
[00:06.98] வானம் ஏற அழைத்தேன்!
[00:09.98] தப்பித் தொலைந்தே
[00:11.98] போகத் துடித்தாய்
[00:14.74] உடன் யாரும் இல்லாத
[00:16.73] தேசம் தேடிப் பிடித்தேன்!
[00:20.23] (இசை)
[00:29.22] எனக்கென பதுக்கிய கனவுகள்
[00:30.98] முதன்முறை தரைவிட்டுப்
[00:32.22] பறக்குது உன்னாலே!
[00:33.98] உனக்கென செதுக்கிய நினைவுகள்
[00:35.73] முதன்முறை உயிர் வந்து
[00:36.98] துடிக்குது உன்னாலே!
[00:38.73] எத்தனை வேகம் சென்றாலும்
[00:40.73] நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
[00:43.23] இத்தனை பக்கம் வந்தாலும்
[00:45.49] வெட்கமே இல்லை உன்னாலே!
[00:48.97] கண்களில் மின்னிடும் காதலை...
[00:50.97] நான் அன்றே கண்டேன் ஒருமுறை
[00:53.74] நெஞ்சினில் தேனை பாய்ச்சிட...
[00:55.73] அதை நீயே சொன்னாய் மறுமுறை
[00:58.26] ரெக்கை விரித்தே ரெக்கை விரித்தே
[01:02.98] எனை உடன் வா என்று
[01:05.48] வானம் ஏற அழைத்தாய்!
[01:07.47] தப்பி தொலைந்தே போக துடித்தேன்
[01:12.26] உடன் யாரும் இல்லாத
[01:13.98] தேசம் தேடிப் பிடித்தாய்!
[01:16.73] (இசை)
[01:46.97] பகலிலே சுவரை வெறித்தேன்
[01:49.23] தெருவிலே தனியே சிரித்தேன்
[01:51.47] கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே!
[01:56.22] இரவிலே தூக்கம் தொலைந்தேன்
[01:58.73] படுக்கையை சுற்றி அலைந்தேன்
[02:00.99] வகுப்பிலே தூங்கி வழிந்தேன்
[02:03.23] எல்லாம் உன்னாலே!
[02:05.74] கட்டம் போட்ட ஒன்றா?
[02:07.98] இல்லை கோடு போட்ட ஒன்றா?
[02:10.52] எந்தச் சட்டைப் போட?
[02:12.23] என முட்டிக்கொண்டேன் உன்னாலே!
[02:15.48] பச்சை வண்ணப் பொட்டா
[02:17.22] இல்லை மஞ்சள் வண்ணப் பொட்டா
[02:20.22] நெற்றி மேலே ரெண்டு
[02:22.23] நான் ஒட்டிக்கொண்டேன் உன்னாலே!
[02:24.98] கண்களில் மின்னிடும் காதலை...
[02:27.24] நான் அன்றே கண்டேன் ஒருமுறை
[02:29.75] நெஞ்சினில் தேனை பாய்ச்சிட...
[02:31.75] அதை நீயே சொன்னாய் மறுமுறை
[02:34.24] (இசை)
[02:53.98] கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
[02:56.48] கசக்கியும் எறிந்திட வேண்டாம்
[02:58.73] எறிந்ததை மீண்டும் பிரித்து
[03:00.98] சிரித்திட வேண்டாமே!
[03:03.73] காற்றிலே முத்தம் வேண்டாம்
[03:05.98] வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
[03:08.24] சுற்றிலும் சத்தம் போடும்
[03:10.51] ஏதும் வேண்டாமே!
[03:12.99] சாலை ஓரத் தேநீர்
[03:15.21] அது கோப்பை ரெண்டில் வேண்டாம்
[03:17.73] பேருந்தேரும் போதும்
[03:19.96] இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே!
[03:22.47] பாறை மேலே ஏறி
[03:24.47] நம் பேரைத் தீட்ட வேண்டாம்
[03:27.23] எல்லை கொஞ்சம் மீற
[03:29.24] இனி அச்சம் ஏதும் வேண்டாமே!
[03:32.23] கண்களில் மின்னிடும் காதலை...
[03:33.98] நீ அன்றே கண்டாய் ஒருமுறை
[03:36.73] நெஞ்சில் தேனை பாய்ச்சிட...
[03:38.73] அதை நானே சொன்னேன் மறுமுறை
[03:41.73] ரெக்கை முளைத்தே
[03:43.73] ரெக்கை முளைத்தே
[03:46.22] உனை உடன் வா என்று
[03:48.24] வானம் ஏற அழைத்தேன்.
[03:50.72] தப்பித் தொலைந்தே
[03:53.23] போகத் துடித்தேன்
[03:55.98] உடன் யாரும் இல்லாத
[03:57.23] தேசம் தேடிப் பிடித்தாய்.
[04:00.23] இனி இனி - தனித்தனி உலகினில்
[04:02.23] இருவரும் உலவிடும்
[04:03.48] நிலையே வேண்டாமே
[04:05.03] இனி இனி - மனதினில் தேக்கிட
[04:06.99] காதல் உண்டாக்கிடும்
[04:08.23] வலியே வேண்டாமே
[04:09.70] ஓரக் கண் பார்வை வேண்டாமே
[04:12.23] ஓரடி தூரம் வேண்டாமே
[04:14.48] மாறிடும் நேரம் வேண்டாமே
[04:16.73] ஊரிலே யாரும் வேண்டாமே
[04:20.48] கண்களில் மின்னிடும் காதலை...
[04:21.98] நான் அன்றே கண்டேன் ஒருமுறை
[04:24.98] நெஞ்சில் தேனை பாய்ச்சிட...
[04:26.50] அதை நானே சொன்னேன் மறுமுறை.
