Lrc Player

Satham-Illatha-Thanimai-Ketean

Unknown artist
[04:19.13]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.82] தனிமை கேட்டேன் யுத்தம்

[00:06.30] இல்லாத உலகம் கேட்டேன்

[00:10.91] ரத்தத்தில் என்றென்றும்

[00:12.66] வேகம் கேட்டேன்

[00:16.40] ரகசியமில்லா உள்ளம்

[00:18.39] கேட்டேன் } (2)

[00:54.41] ஆண் : சத்தம் இல்லாத

[00:55.66] தனிமை கேட்டேன் யுத்தம்

[00:57.17] இல்லாத உலகம் கேட்டேன்

[00:58.65] ரத்தத்தில் என்றென்றும்

[00:59.67] வேகம் கேட்டேன்

[01:00.90] ரகசியமில்லா உள்ளம்

[01:02.40] கேட்டேன்

[01:03.16] ஆண் : உயிரைக் கிள்ளாத

[01:04.18] உறவைக் கேட்டேன் ஒற்றைக்

[01:05.39] கண்ணீர்த் துளியைக் கேட்டேன்

[01:07.39] வலிகள் செய்யாத வார்த்தை

[01:08.64] கேட்டேன் வயதுக்குச் சரியான

[01:10.38] வாழ்க்கை கேட்டேன்

[01:11.67] ஆண் : இடிகள் இல்லாத

[01:13.17] மேகம் கேட்டேன் இளமை

[01:14.17] கெடாத மோகம் கேட்டேன்

[01:15.65] பறந்து பறந்து நேசம்

[01:17.66] கேட்டேன் பாசாங்கில்லாத

[01:18.92] பாசம் கேட்டேன்

[01:20.66] ஆண் : புல்லின் நுனியில்

[01:21.40] பனியைக் கேட்டேன் பூவின்

[01:22.66] மடியில் படுக்கை கேட்டேன்

[01:24.40] தானே உறங்கும் விழியைக்

[01:25.90] கேட்டேன் தலையைக் கோதும்

[01:26.90] விரலைக் கேட்டேன்

[01:28.66] ஆண் : நிலவில் நனையும்

[01:29.91] சோலை கேட்டேன் நீலக்

[01:30.90] குயிலின் பாடல் கேட்டேன்

[01:32.91] நடந்து போக நதிக்கரை

[01:34.38] கேட்டேன் கிடந்து உருளப்

[01:35.88] புல்வெளி கேட்டேன்

[01:37.15] ஆண் : தொட்டுப் படுக்க

[01:38.16] நிலவைக் கேட்டேன்

[01:39.13] எட்டிப் பறிக்க விண்மீன்

[01:42.16] கேட்டேன் துக்கம் மறந்த

[01:42.66] தூக்கம் கேட்டேன் தூக்கம்

[01:44.42] மணக்கும் கனவைக் கேட்டேன்

[01:45.66] ஆண் : பூமிக்கெல்லாம்

[01:46.90] ஒரு பகல் கேட்டேன்

[01:47.90] பூவுக்கெல்லாம் ஆயுள்

[01:48.90] கேட்டேன் மனிதர்கெல்லாம்

[01:50.65] ஒரு மனம் கேட்டேன்

[01:52.15] பறவைக்கெல்லாம்

[01:53.16] தாய்மொழி கேட்டேன்

[01:54.41] ஆண் : உலகுக்கெல்லாம்

[01:55.14] சம மழை கேட்டேன்

[01:56.42] ஊருக்கெல்லாம் ஒரு

[01:57.91] நதி கேட்டேன் வானம்

[01:58.94] முழுக்க நிலவைக்

[02:00.14] கேட்டேன் வாழும்

[02:01.16] போதே சொர்க்கம்

[02:02.16] கேட்டேன்

[02:03.18] ஆண் : எண்ணம்

[02:03.89] எல்லாம் உயரக்

[02:04.66] கேட்டேன் எரியும்

[02:05.63] தீயாய் கவிதை

[02:06.41] கேட்டேன் கண்ணீர்

[02:07.41] கடந்த ஞானம் கேட்டேன்

[02:09.17] காமம் கடந்த யோகம்

[02:10.66] கேட்டேன்

[02:11.66] ஆண் : சுற்றும் காற்றின்

[02:12.40] சுதந்திரம் கேட்டேன்

[02:13.40] சிட்டுக் குருவியின்

[02:14.41] சிறகைக் கேட்டேன்

[02:15.39] உச்சந் தலை மேல்

[02:16.65] மழையைக் கேட்டேன்

[02:17.66] உள்ளங்காலில் நதியைக்

[02:19.14] கேட்டேன்

[02:20.47] ஆண் : பண்கொண்ட

[02:21.23] பாடல் பயிலக் கேட்டேன்

[02:21.90] பறவைக்கிருக்கும் வானம்

[02:23.47] கேட்டேன் நன்றி கெடாத

[02:25.21] நட்பைக் கேட்டேன் நடுங்க

[02:26.72] விடாத செல்வம் கேட்டேன்

[02:28.46] ஆண் : மலரில் ஒரு

[02:29.46] நாள் வசிக்கக் கேட்டேன்

[02:30.21] மழையின் சங்கீதம்

[02:32.20] ருசிக்கக் கேட்டேன்

[02:32.96] நிலவில் நதியில் குளிக்கக்

[02:34.72] கேட்டேன் நினைவில் சந்தனம்

[02:35.97] மணக்கக் கேட்டேன்

[02:37.21] ஆண் : விழுந்தால்

[02:37.69] நிழல் போல் விழவே

[02:38.73] கேட்டேன் அழுதால்

[02:39.48] மழை போல் அழவே

[02:40.73] கேட்டேன் ஏகாந்தம்

[02:41.71] என்னோடு வாழக்

[02:42.72] கேட்டேன் எப்போதும்

[02:43.98] சிரிக்கின்ற உதடுகள்

[02:44.74] கேட்டேன்

[02:45.34] ஆண் : பனித்துளி

[02:46.61] போல் ஒரு சூரியன்

[02:47.58] கேட்டேன் சூரியன்

[02:48.08] போல் ஒரு பனித் துளி

[02:49.57] கேட்டேன் ராஜராஜனின்

[02:50.34] வாளைக் கேட்டேன்

[02:52.07] வள்ளுவன் எழுதிய

[02:53.34] கோலைக் கேட்டேன்

[02:54.57] ஆண் : பாரதியாரின்

[02:55.08] சொல்லைக் கேட்டேன்

[02:56.10] பார்த்திபன் தொடுத்த

[02:57.34] வில்லைக் கேட்டேன்

[02:58.16] மாயக் கண்ணன் குழலைக்

[02:59.93] கேட்டேன் மதுரை மீனாட்சி

[03:01.65] கிளியைக் கேட்டேன்

[03:03.16] ஆண் : சொந்த

[03:03.65] உழைப்பில் சோறை

[03:04.15] கேட்டேன் தொட்டுக்

[03:05.15] கொள்ள பாசம் கேட்டேன்

[03:06.15] மழையைப் போன்ற

[03:07.89] பொறுமையை கேட்டேன்

[03:09.17] புல்லைப் போன்ற

[03:10.19] பணிவைக் கேட்டேன்

[03:11.18] புயலைப் போன்ற

[03:12.14] துணிவைக் கேட்டேன்

[03:13.14] ஆண் : இடியைத்

[03:14.67] தாங்கும் தோளை

[03:14.93] கேட்டேன் இழிவைத்

[03:16.49] தாங்கும் இதயம் கேட்டேன்

[03:17.75] துரோகம் தாங்கும் வலிமைக்

[03:20.09] கேட்டேன் தொலைந்து விடாத

[03:21.59] பொறுமையை கேட்டேன்

[03:22.08] ஆண் : சொன்னது

[03:22.58] கேட்கும் உள்ளம்

[03:23.84] கேட்டேன் சொன்னால்

[03:24.34] சாகும் வேகம் கேட்டேன்

[03:25.70] கயவரை அறியும் கண்கள்

[03:27.69] கேட்டேன் காலம் கடக்கும்

[03:29.19] கால்கள் கேட்டேன்

[03:30.20] ஆண் : சின்ன சின்னத்

[03:31.44] தோல்விகள் கேட்டேன்

[03:32.44] சீக்கிரம் ஆறும் காயம்

[03:33.94] கேட்டேன் மூடியில்லாத

[03:35.68] முகங்கள் கேட்டேன்

[03:37.19] போலியில்லாத புன்னகை

[03:37.93] கேட்டேன்

[03:38.95] ஆண் : தவழும் வயதில்

[03:39.92] தாய்ப்பால் கேட்டேன்

[03:40.95] தாவும் வயதில் பொம்மைகள்

[03:42.45] கேட்டேன் ஐந்து வயதில்

[03:44.20] புத்தகம் கேட்டேன் ஆறாம்

[03:45.94] விரலாய் பேனா கேட்டேன்

[03:47.41] ஆண் : காசே வேண்டாம்

[03:48.68] கருணை கேட்டேன்

[03:49.70] தலையணை வேண்டாம்

[03:50.69] தாய்மடி கேட்டேன் கூட்டுக்

[03:51.94] கிளி போல் வாழக் கேட்டேன்

[03:53.69] குறைந்த பட்ச அன்பைக்

[03:55.44] கேட்டேன்

[03:56.70] ஆண் : இத்தனை கேட்டும்

[03:57.68] கிடைக்கவில்லை இதிலே

[03:58.68] எதுவும் நடக்கவில்லை

[04:00.46] வாழ்வே வாழ்வே வேண்டாம்

[04:01.92] என்று மரணம் மரணம் மரணம்

[04:04.17] கேட்டேன்