பச்சை நிறமே
[00:00.33] சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
[00:11.35] சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
[00:45.05] பச்சை நிறமே பச்சை நிறமே..
[00:47.83] இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
[00:50.05] புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
[00:52.79] எனக்குச் சம்மதம் தருமே..
[00:59.05] பச்சை நிறமே பச்சை நிறமே..
[01:00.61] இலையின் இளமை பச்சை நிறமே..
[01:03.58] உந்தன் நரம்பும் பச்சை நிறமே..
[01:06.59] எனக்குச் சம்மதம் தருமே..
[01:09.54] எனக்குச் சம்மதம் தருமே.. எனக்குச் சம்மதம் தருமே..
[01:36.55] கிளையில் காணும் கிளியின் மூக்கு
[01:38.82] விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
[01:41.33] புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
[01:44.59] பூமி தொடாத பிள்ளையின் பாதம்
[01:52.79] எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
[01:58.55] எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்;
[02:03.79] அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
[02:06.29] அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
[02:09.29] தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
[02:11.81] கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
[02:15.06] மஞ்சள்; மஞ்சள்; மஞ்சள்;
[02:15.30] மாலை நிலவின் மரகத மஞ்சள்
[02:25.54] எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
[02:30.29] சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
[02:41.29] சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
[02:53.29] அலையில்லாத ஆழி வண்ணம்
[02:58.58] முகிலில்லாத வானின் வண்ணம்
[03:04.05] மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
[03:09.33] குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
[03:15.04] ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
[03:20.05] எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
[03:25.55] எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
[03:53.58] இரவின் நிறமே இரவின் நிறமே..
[03:58.55] கார்காலத்தின் மொத்த நிறமே..
[04:04.05] காக்கைச் சிறகில் காணும் நிறமே..
[04:09.55] பெண்மை எழுதும் கண்மை நிறமே..
[04:14.80] வெயிலில் பாடும் குயிலின் நிறமே..
[04:20.33] எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..
[04:25.58] எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..
[04:30.33] சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
[04:41.29] சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
[04:53.09] வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
[04:58.33] மழையில் உடையும் தும்பை நிறமே..
[05:03.54] வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
[05:06.57] விழியில் பாதி உள்ள நிறமே..
[05:09.04] மழையில் உடையும் தும்பை நிறமே..
[05:11.79] உனது மனசின் நிறமே..
[05:14.79] உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே..
