Lrc Player

நெஞ்சுக்குள்ள ஒம்ம

Shakthisree Gopalan, A. R. Rahman
[04:50.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.32] நெஞ்சுக்குள்ள

[00:21.60] ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க

[00:33.33] எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

[00:37.84] வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி

[00:42.60] இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

[00:47.57] வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்

[00:52.31] ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

[00:56.82] நீர் போன பின்னும்

[00:58.37] நிழல் மட்டும் போகலயே போகலயே

[01:01.81] நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே

[01:08.58] அப்ப நிமிந்தவ தான்

[01:09.82] அப்பறமாக் குனியலையே! குனியலையே!

[01:13.35] கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

[01:20.10] நெஞ்சுக்குள்ள

[01:22.32] ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க

[01:34.60] எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

[01:58.09] பச்சி ஒறங்கிருச்சு

[02:00.33] பால்தயிராத் தூங்கிருச்சு

[02:02.34] இச்சி மரத்து மேல

[02:04.57] எல கூடத் தூங்கிருச்சு

[02:12.34] காச நோய்க் காரிகளும்

[02:14.10] கண்ணுறங்கும் வேளையில

[02:16.58] ஆசநோய் வந்தமக

[02:18.35] அரை நிமிசம் தூங்கலையே!

[02:25.57] நெஞ்சுக்குள்ள ஒம்ம

[02:28.07] முடிஞ்சிருக்கேன்!- இங்க

[02:32.87] எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

[02:58.86] ஒரு வாய் எறங்கலையே

[03:01.33] உள்நாக்கு நனையலையே

[03:03.57] ஏழெட்டு நாளா

[03:05.08] எச்சில் முழுங்கலையே!

[03:13.07] ஏழை இளஞ்சிறுக்கி

[03:15.08] ஏதும் சொல்ல முடியலையே

[03:17.59] ரப்பர் வளவிக்கெல்லாம்

[03:19.82] சத்தமிட வாயில்லையே!

[03:26.11] நெஞ்சுக்குள்ள ஒம்ம

[03:29.09] முடிஞ்சிருக்கேன்!- இங்க

[03:31.58] எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?