Lrc Player

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

Sumama ngalan sisters
[20:10.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.78] நேரிசை வெண்பா

[00:04.85] துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

[00:11.53] பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

[00:18.30] நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

[00:24.04] கந்தர் சஷ்டி கவசம் தனை.

[00:28.28] குறள் வெண்பா

[00:29.80] அமரரிடர் தீர வமரம் புரிந்த

[00:35.59] குமரனடி நெஞ்சே குறி

[00:51.31] சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

[00:54.81] சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

[00:59.04] பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

[01:02.83] கீதம் பாடக் கிண்கிணியாட

[01:23.07] மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

[01:27.03] கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

[01:31.03] வர வர வேலாயுதனார் வருக

[01:34.81] வருக வருக மயிலோன் வருக

[01:39.32] இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற

[01:42.82] மந்திர வடிவேல் வருக வருக

[01:47.04] வாசவன் மருகா வருக வருக

[01:50.80] நேசக் குறமகள் நினைவோன் வருக

[01:55.29] ஆறுமுகம் படைத்த ஐயா வருக

[01:58.82] நீறிடும் வேலவன் நித்தம் வருக

[02:03.07] சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

[02:07.34] சரவணபவனார் சடுதியில் வருக

[02:19.57] ரகணபவச ரரரர ரரர

[02:23.04] ரிகண பவச ரிரிரி ரிரிரி

[02:27.56] விணபவ சரவண வீராநமோ நம

[02:31.79] நிபவ சரவண நிற நிற நிறென்

[02:36.03] வசர ஹணபவ வருக வருக

[02:56.03] என்னையாளும் இளையோன் கையில்

[03:03.79] பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்

[03:08.30] பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க

[03:12.31] விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

[03:16.53] ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்

[03:20.29] உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

[03:24.58] கிலியும் சௌவும் கிளரொளி யையும்

[03:28.28] நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்

[03:32.28] சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

[03:36.30] குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

[03:48.84] ஆறுமுகமும் அணிமுடியாறும்

[03:52.32] நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

[03:56.54] பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

[04:00.54] நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

[04:04.55] ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்

[04:24.72] ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

[04:28.99] பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

[04:32.98] நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

[04:37.26] முப்புரி நூலும் முத்தணி மார்பும்

[04:41.23] செப்பழகுடைய திருவயிறுந்தியும்

[04:44.75] துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்

[04:48.98] நவரத்தினம் பதித்த நற்சீராவும்

[04:53.24] இருதொடை யழகும் இணைமுழந்தாளும்

[04:57.00] திருவடியதனில் சிலம்பொலி முழங்க

[05:01.22] செககண செககண செககண செகண

[05:05.25] மொக மொக மொகமொக மொக மொக மொகென

[05:08.73] நகநக நகநக நகநக நகென

[05:12.99] டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண

[05:17.23] ரரரர ரரரர ரரரர ரரர

[05:21.23] ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

[05:25.49] டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு

[05:29.74] டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

[05:34.01] விந்து விந்து மயிலோன் விந்து

[05:37.50] முந்து முந்து முரகவேள் முந்து

[05:41.75] என்றனை யாளும் ஏரகச் செல்வ

[05:54.22] மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்

[05:58.23] லாலா லாலா லாலா வேசமும்

[06:02.26] லீலா லீலா லீலா விநோதனென்றும்

[06:06.48] உன் திருவடியை உறுதியென்றெண்ணும்

[06:26.92] என் தலைவைத்துன் இணையடி காக்க

[06:31.18] என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க

[06:35.44] பன்னிரு விழியால் பாலனைக் காக்க

[06:39.44] அடியேன் வதனம் அழகுவேல் காக்க

[06:43.91] பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

[06:47.93] கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க

[06:51.93] விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

[06:56.41] நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

[07:00.43] பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

[07:04.17] முப்பத்திருபல் முனைவேல் காக்க

[07:08.41] கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

[07:24.43] என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

[07:28.95] மார்பை ரத்தின வடிவேல் காக்க

[07:32.92] சேரிள முலைமார் திருவேல் காக்க

[07:37.16] வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க

[07:57.41] பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

[08:01.22] அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

[08:05.22] பழுபதினாறும் பருவேல் காக்க

[08:09.45] வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

[08:13.43] சிற்றிடையழகுற செவ்வேல் காக்க

[08:17.44] நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

[08:21.45] ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க

[08:25.43] பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

[08:29.16] வட்டக் குதத்தை வல்வேல் காக்க

[08:33.67] பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

[08:37.16] ஐவிரலடியினை அருள் வேல் காக்க

[08:53.16] கை களிரண்டும் கருணை வேல் காக்க

[08:56.95] முன் கையிரண்டும் முரண்வேல் காக்க

[09:00.94] பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க

[09:04.92] நாவிற் சரஸ்வதி நற்றுணையாக

[09:08.72] நாபிக் கமலம் நல்வேல் காக்க

[09:12.68] எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

[09:20.42] அடியேன் வசனம் அசைவுள நேரம்

[09:24.17] கடுகவே வந்து கனகவேல் காக்க

[09:27.92] அரையிருள் தன்னில் அணையவேல் காக்க

[09:35.95] ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

[09:39.99] தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

[09:43.93] காக்க காக்க கனகவேல் காக்க

[09:47.45] நோக்க நோக்க நொடியினில் நோக்க

[09:51.91] தாக்க தாக்க தடையறத் தாக்க

[10:03.92] பார்க்க பார்க்க பாவம் பொடிபட

[10:08.21] பில்லி சூனியம் பெரும்பகை அகல

[10:12.17] வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

[10:16.45] அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

[10:20.69] பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

[10:24.42] கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்

[10:28.68] பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்

[10:32.68] அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட

[10:37.66] இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

[10:41.17] எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

[10:45.42] கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்

[10:49.42] விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்

[10:53.68] தண்டியக் காரரும் சண்டாளர்களும்

[10:57.67] என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

[11:10.17] ஆனையடியினில் அரும்பாவைகளும்

[11:14.16] பூனை மயிரும் பிள்ளைகளென்பும்

[11:18.16] நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

[11:22.25] பாவைகளுடனே பலகலசத்துடன்

[11:26.96] மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

[11:30.66] ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்

[11:34.91] காசும் பணமும் காவுடன் சோறும்

[11:38.93] ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்

[11:43.01] அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

[11:47.30] மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

[11:51.51] காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

[11:55.50] அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

[11:59.51] வாய் விட்டலறி மதிகெட்டோடப்

[12:03.75] படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

[12:08.02] கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

[12:12.25] கட்டியுருட்டு கால் கை முறியக்

[12:16.56] கட்டு கட்டு கதறிடக் கட்டு

[12:20.01] முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

[12:24.51] செக்கு செக்கு செதில் செதிலாக

[12:28.75] சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

[12:41.49] குத்து குத்து கூர் வடிவேலால்

[12:45.06] பற்று பற்று பகலவன் தணலெரி

[12:49.07] தணலெரி தணலெரி தணலதுவாக

[12:53.25] விடு விடு வேலை வெருண்டது ஓட

[12:57.24] புலியும் நரியும் புன்னரி நாயும்

[13:01.24] எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

[13:05.00] தேளும் பாம்பும் செய்யான் பூரான்

[13:09.00] கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

[13:13.27] ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

[13:17.25] ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்

[13:21.28] வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

[13:25.26] சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

[13:29.25] குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி

[13:33.26] பக்கப்பிளவை படர்தொடை வாழை

[13:37.26] கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

[13:41.29] பற்குத்தரணை பருஅரையாப்பும்

[13:53.75] எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

[13:57.28] நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்

[14:01.25] ஈரேழுலகமும் எனக்குறவாக

[14:05.25] ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்

[14:09.24] மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக

[14:13.28] உன்னைத் துதித்த உன்திருநாமம்

[14:17.28] சரவணபவனே சைலொளிபவனே

[14:21.30] திரிபுரபவனே திகழொளிபவனே

[14:25.00] பரிபுரபவனே பவமொழிபவனே

[14:29.32] அரிதிருமுருகா அமராபதியைக்

[14:33.01] காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்

[14:37.02] கந்தா குகனே கதிர்வேலவனே

[14:41.24] கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

[14:45.50] இடும்பனை அழித்த இனியவேல் முரகா

[14:49.02] தணிகாசலனே சங்கரன் புதல்வா

[14:53.25] பழநிப் பதிவாள் பாலகுமரா

[15:09.25] ஆவினன் குடிவாள் அழகிய வேலா

[15:13.54] செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

[15:17.25] சமரா புரிவாழ் சண்முகத்தரசே

[15:21.52] காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

[15:25.51] என்னா விருக்க யானுனைப் பாட

[15:29.56] எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முரகனைப்

[15:33.55] பாடினே னாடினேன் பரவசமாக

[15:37.25] ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

[15:41.66] நேசமுடன் யான் நெற்றியில் அணியப்

[15:45.61] பாச வினைகள் பற்றது நீங்கி

[15:49.86] உன்பதம் பெறவே உன்னருளாக

[15:53.61] அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்

[15:58.13] மெத்த மெத்தாக வேலா யுதனார்

[16:01.86] சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

[16:05.61] வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

[16:10.10] வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

[16:14.36] வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

[16:18.11] வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

[16:22.35] வாழ்க வாழ்க வாரணத்துவசம்

[16:26.36] வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

[16:38.35] எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

[16:42.15] எத்தனை யடியேன் எத்தனை செயினும்

[16:46.62] பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

[16:50.86] பெற்றவள் குறமகள் பெற்றவளாமே