Siva-Sivaya-Potri
[00:19.34] சிவா சிவாய போற்றியே!
[00:23.11] பிறப்பறுக்கும் ஏகனே!
[00:25.60] பொறுத்தருள் அநேகனே!
[00:33.13] பரம்பொருள் உன் நாமத்தை
[00:35.38] கரங்குவித்துப் பாடினோம்!
[00:38.15] இறப்பிலி உன் கால்களை
[00:40.60] சிரங்குவித்து தேடினோம்!
[00:48.36] யாரு இவன்? யாரு இவன்?
[00:50.36] கல்லத் தூக்கிப் போறானே!
[00:53.09] புள்ள போல தோளு மேல
[00:55.39] உன்னத் தூக்கிப் போறானே!
[00:57.83] கண்ணு ரெண்டு போதல!
[01:00.14] கையு காலு ஓடல!
[01:02.59] கங்கையத்தான் தேடிகிட்டு
[01:05.10] தன்னத் தானே சுமந்துகிட்டு
[01:07.37] லிங்கம் நடந்து போகுதே!
[01:38.84] எல்லையில்லாத ஆதியே..!
[01:41.63] எல்லாமுணர்ந்த சோதியே..!
[01:44.09] மலைமகள் உன் பாதியே..!
[01:46.38] அலைமகள் உன் கைதியே....!!
[01:51.34] அருள்வல்லான் எம் அற்புதன்..!
[01:53.85] அரும்பொருள் எம் அர்ச்சிதன்..!
[01:56.34] உமை விரும்பும் உத்தமன்..!
[01:58.61] உருவிலா எம் ருத்திரன்....!!
[02:03.85] ஒளிர்விடும் எம் தேசனே..!
[02:06.12] குளிர்மலை தன் வாசனே..!
[02:08.34] எழில்மிகு எம் நேசனே..!
[02:10.88] அழித்தொழிக்கும் ஈசனே...!!
[02:16.35] நில்லாமல் ஆடும் பந்தமே..!
[02:20.83] கல்லாகி நிற்கும் உந்தமே..!
[02:23.60] கல்லா எங்கட்கு சொந்தமே..!
[02:25.60] எல்லா உயிர்க்கும் அந்தமே....!!
