Lrc Player

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (320 kbps)

Unknown artist
[04:53.02]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.08] அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்

[00:01.82] அப்பன் பழனியப்பன் – தினம்

[00:03.07] அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்

[00:04.56] அப்பன் பழனியப்பன்

[00:13.10] கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்

[00:16.34] காவலில் நின்றிருப்பான் – அங்கு

[00:19.82] கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்

[00:22.60] கண்டுகளித்திருப்பான்.

[00:25.82] துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு

[00:28.58] ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த

[00:31.83] சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை

[00:34.83] சொல்ல மொழியுமுண்டோ!

[00:38.08] வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்

[00:40.83] வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி

[00:43.57] வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்

[00:47.34] வேலனை வெல்வதுண்டோ!

[00:50.34] சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை

[00:53.57] சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த

[00:56.81] சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்

[00:59.82] சென்று பணிந்திடுவோம்

[01:03.58] பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்

[01:05.82] பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு

[01:09.08] பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்

[01:15.08] செய்து பணிந்திடுவோம்!

[01:17.08] செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்

[01:19.06] தண்டாயுத மல்லவோ – அந்த

[01:21.82] சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு

[01:24.09] செட்டி மகளல்லவோ!

[01:28.81] கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட

[01:31.32] கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும்

[01:34.31] குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி

[01:36.58] கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

[01:39.83] ஆறும் அறுபதும் ஆனஇருபதும்

[01:42.82] ஆடிநடந்து செல்வோம்-சில

[01:46.31] ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்

[01:49.08] அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

[01:51.82] ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை

[01:54.82] உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்

[01:58.58] உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து

[02:02.57] மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!

[02:03.35] வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்

[02:06.84] வேட்டுவன் கந்தனுக்கு – இரு

[02:08.32] கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்

[02:11.57] கனிவு நிறைந்திருக்கு!

[02:15.57] காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று

[02:18.32] கால்களிலே விழுவோம் – அவன்

[02:21.58] கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்

[02:23.58] காவிரிபோல் வளர்வோம்!