Mannil indha kadhal
[00:13.16] மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
[00:20.15] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
[00:26.67] பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
[00:32.66] கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
[00:39.40] மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
[00:46.42] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
[00:52.91] பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
[00:58.89] கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
[01:41.17] ***
[01:41.92] வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
[01:45.19] என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
[01:48.65] சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
[01:51.65] சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
[01:55.15] கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
[01:58.40] கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
[02:01.40] விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
[02:04.92] அதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்
[02:13.41] மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
[02:19.64] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
[02:59.14] ***
[02:59.16] முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
[03:02.16] கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
[03:05.40] சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
[03:08.68] சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
[03:12.17] எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
[03:15.16] இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
[03:18.69] முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
[03:21.92] விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
[03:29.96] மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
[03:36.94] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
[03:43.46] பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
[03:49.69] கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
[03:56.44] மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
[04:03.44] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
